டெல்லி புறப்படும் எடப்பாடி பழனிசாமி! அமித் ஷாவுடன் சந்திப்பு! காரணம் என்ன? பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரும் 26ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தை நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்று தெரிய வருகிறது.

அதே சமயத்தில் பாஜகவின் மாநில தலைவராக உள்ள அண்ணாமலையால் நிலவும் அதிமுக-பாஜக இடையன கூட்டணி குழப்பங்கள் குறித்தும் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை, கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கம் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் அண்மையில் வெளியாகிய நிதியமைச்சர் தியாகராஜன் ஆடியோ குறித்தும், பாஜக அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK GS EPS Meet Amit shah in delhi


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->