அதிமுக தலைமை அலுவலக வழக்கு.! தமிழக போலீசுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்.!
admk head office clash case chennai hc order
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரத்தில், அதிமுகவின் நான்கு மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுகவின் 37 பேரை கைது செய்ய தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த கலவரம் தொடர்பாக சுமார் 400 க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், அதிமுகவின் மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம், விருகை ரவி, அசோக் உள்ளிட்ட 37 பேர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தில், காவல்துறை தரப்பில் இந்த வழக்கு விசாரணைக்கு மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கினார். மேலும் அதுவரை அதிமுக மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் உள்ளிட்ட 37 பேரை கைது செய்ய தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.
English Summary
admk head office clash case chennai hc order