அதிமுகவில் ஒற்றை தலைமை... ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?
admk in one head
அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமையே என்றும், அதுகுறித்து இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ள.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று சென்னை: ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
"அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர்பார்ப்பது ஒற்றை தலைமை தான். ஒற்றை தலைமை யார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும்.
இன்று நடைபெற்றது கருத்து பரிமாற்றம் தான். ஒற்றை தலைமைக்கான விடையை கட்சி தான் அறிவிக்கும்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.