#BigBreaking || நிராகரிக்கிறோம்.... அனைத்தையும் நிராகரிக்கிறோம்... ஒரே போடாக போட்ட சிவி சண்முகம்.!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடக்கி நடந்து வருகிறது. 2,665 பேர் பங்கேற்கும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு எடப்பாடி கே பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் வந்தனர். அப்போது இரட்டை தலைமை வேண்டாம்... ஒற்றை தலைமை வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில், இருபத்தி மூன்று தீர்மானங்களையும் கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உடைய பார்வைக்கு வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள், நிராகரிக்கிறோம்.. நிராகரிக்கிறோம்.. என்று எதிர்த்தனர்.

ஆவேசமாக எழுந்துவந்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், "நிராகரிக்கிறோம்... அனைத்து பொதுக்குழு தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்... அனைத்து தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது... என்று சொல்லி ஆவேசமாக உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, இந்தப் பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிக்கிறோம். அடுத்து எப்போது பொதுக்குழு கூட்டம் கூட்டப்படுகிறதோ, அப்போது அதிமுக ஒற்றை தலைமை என்ற தீர்மானத்தோடு சேர்த்து இந்த பொது தீர்மானங்களை ஆதரிக்க தயாராக இருக்கிறோம் என்று கேபி முனுசாமி பேசினார்.

ஒற்றை தலைமையோடு அடுத்த பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்றும் கேபி முனுசாமி பேசியுள்ளார் அனைத்து திருமணங்களையும் இந்தப் பொதுக்குழு நிராகரிக்கிறது என்று எப்போது ஒற்றை தலைமை தீர்மானம் ஒப்புக் கொள்ளப்படுகிறது அப்போதுதான் மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ops and eps issue cv shanmugam sppech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->