#சற்றுமுன் || ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்., கொந்தளிப்பில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்... பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற கூடாது என்ற நோக்கத்தோடு ஓபிஎஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகார் நிராகரிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் இடைக்கால உத்தரவு வர உள்ளது.

இந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள திருமண மண்பத்திற்கு செல்லும் வழியில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக அங்கு பேரணியாக வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தான் இந்த செயலை செய்ததாக, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் நாளை பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த கூடாது என்பதற்காக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS VS EPS CHENNAI MEET ISSUE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->