#BigBreaking || பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறிய முக்கிய புள்ளிகள்... ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி சைடு.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். 

2,500 பேர் பங்கேற்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் சிலர் போலி பாஸ்களுடன் வந்திருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர். 

அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். ஓபிஎஸ்-யை வெளிய போக சொல்லி பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

மேலும், இரட்டை தலைமை வேண்டாம்... ஒற்றை தலைமை வேண்டும் என்றும் கோஷம் பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், ஜேசிடி ஆகியோர் பொதுக்குழு மேடையில் அமர்ந்து இருந்தனர். அப்போது அவர்களுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். 

வைத்தியலிங்கம் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களை, பொதுக்குழு உறுப்பினர்கள் 'துரோகி.. துரோகி' என்ற வார்த்தையை சொல்லி கோஷமிட்டதால், வேறு வழியில்லாமல் வைத்தியலிங்கம் மேடையிலிருந்து கீழே இறங்கினார். மேலும் அதேபோல் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான ஜேசிடி-யும் கீழே இரங்கி சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS VS EPS VAITHIYALINGAM ISSUE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->