திமுக, அதிமுக கூட்டணி பேச்சுகள் முடிவுற்றுது. தொகுதி பங்கீடு செய்து கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இறுதி பட்டியல் வெளியாகிவிட்ட்டது.
அதிமுக கூட்டணியில், அதிமுக 20, பாமக 7, பாஜக 5, தேமுதிக 4, தமாகா 1, என் ஆர் காங்கிரஸ் 1, புதிய தமிழகம் 1, புதிய நீதிக்கட்சி 1 என 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக கூட்டணியில், திமுக 20, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, மதிமுக 1, ஐஜேகே 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொமதேக 1 என 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ தொகுதி பட்டியலின்படி, எந்த எந்த கட்சிகள் நேரடி போட்டியில் இருக்கிறது என்பதை பார்க்கலாம். இந்த பட்டியல் ஆனது ஏறக்குறைய நாம் முன்பே கணித்து வெளியிட்ட பட்டியலில் பொருந்துவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக, திமுக நேரடியாக 8 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதும் தொகுதிகள் :
தென் சென்னை, திருவண்ணாமலை, சேலம், பொள்ளாச்சி, நீலகிரி, மதுரை காஞ்சிபுரம், நெல்லை ஆகிய 10 தொகுதிகள் மட்டுமே நேரடி போட்டி இருக்கும் என கருதபடுகிறது.
அதிமுகவும், காங்கிரசும் நேரடியாக மோதும் தொகுதிகள் :
கிருஷ்ணகிரி, கரூர், திருவள்ளூர், ஆரணி, தேனி ஆகிய 5 தொகுதிகள் நேரடி போட்டி உள்ளது.
அதிமுக, இந்திய கம்யுனிஸ்ட் நேரடியாக மோதும் தொகுதிகள் :
இந்திய கம்யுனிஸ்ட் போட்டியிடுவதாக கருதப்படும் நாகை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகளிலுமே அதிமுக மட்டுமே நேரடி போட்டியாக உள்ளது.
அதிமுக, மார்கசிஸ்ட் கம்யுனிஸ்ட் நேரடியாக மோதும் தொகுதிகள் :
மார்கசிஸ்ட் கம்யுனிஸ்ட் போட்டியிடும் மதுரை தொகுதியில் அதிமுக நேரடி போட்டியாக இருக்கிறது.
அதிமுக, கொமதேக நேரடியாக மோதும் தொகுதி :
கொமதேக போட்டியிடும் நாமக்கல் தொகுதியில் அதிமுக நேரடி போட்டியாக இருக்கிறது.
அதிமுக, ஐஜெக நேரடியாக மோதும் தொகுதி :
ஐஜெக போட்டியிடும் பெரம்பலூர் தொகுதியில் நேரடி போட்டியாக அதிமுகவே உள்ளது.
அதிமுக, விசிக நேரடியாக மோதும் தொகுதி :
விசிக போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் மட்டும் அதிமுகவுடன் நேரடி போட்டியாக உள்ளது.
அதிமுக, மதிமுக நேரடியாக மோதும் தொகுதி :
மதிமுக போட்டியிடும் ஈரோடு தொகுதியில் அதிமுக நேரடி போட்டியாக உள்ளது.
பாமக, திமுக நேரடியாக மோதும் தொகுதிகள் :
மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், தருமபுரி, கடலூர், திண்டுக்கல், அரக்கோணம் ஆகிய 6 தொகுதிகளில் நேரடியாக போட்டியில் இருக்கிறது.
பாமக, விசிக நேரடியாக போட்டியிடும் தொகுதி :
விழுப்புரம் தொகுதியில் மட்டும் நேரடியாக பாமக விசிக போட்டியில் இருக்கிறது.
பாஜக, காங்கிரஸ் நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் :
கன்னியாகுமரி, சிவகங்கை தொகுதியில் நேரடியாக போட்டியில் இருக்கிறது.
பாஜக, திமுக நேரடியாக போட்டியிடும் தொகுதி:
தூத்துக்குடி தொகுதியில் மட்டும் நேரடி போட்டி உள்ளது.
பாஜக, இயுமுலீ நேரடியாக போட்டியிடும் தொகுதி :
இயுமுலீ போட்டியிடுவதாக கருதப்படும் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக நேரடி போட்டியாக உள்ளது.
பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நேரடியாக போட்டியிடும் தொகுதி :
மார்கசிஸ்ட் கம்யுனிஸ்ட் போட்டியிடும் கோவை தொகுதியில் பாஜக நேரடி போட்டியாக உள்ளது.
தேமுதிக, திமுக நேரடியாக மோதும் தொகுதிகள் :
கள்ளக்குறிச்சி, வட சென்னையில் நேரடியாக போட்டியில் உள்ளது.
தேமுதிக, காங்கிரஸ் நேரடியாக மோதும் தொகுதிகள் :
விருதுநகர், திருச்சியில் நேரடியாக போட்டியில் உள்ளது.
புதிய நீதிக்கட்சி, திமுக நேரடி போட்டி :
புதிய நீதிக்கட்சி போட்டியிடும் வேலூர் தொகுதியில் திமுக நேரடி போட்டியாக உள்ளது.
தமாகா, திமுக நேரடி போட்டி :
தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தஞ்சாவூர் தொகுதியில் திமுகவுடன் மோதுகிறது.
புதிய தமிழகம், திமுக நேரடி போட்டி :
புதிய தமிழகம் போட்டியிடும் தென்காசி தொகுதியில் நேரடி போட்டியாக திமுக உள்ளது.
என் ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் நேரடி போட்டி :
பாண்டிச்சேரியின் ஒரே தொகுதியில் என் ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் நேரடி போட்டி என்பது உறுதியாகியுள்ளது.