அதிமுக கூட்டணியில்.. புதிய தமிழகத்திற்கு தென்காசி.. SDPI-க்கு எந்த தொகுதி?
AIADMK allocate seats to alliance parties
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை என்பது அறிவிக்கப்படவில்லை.
அதேபோன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அதே போன்று அதிமுக தலைமையான கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படாததால் அத்தகுதி எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
AIADMK allocate seats to alliance parties