அதிமுக கூட்டணியில்.. SDPI கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? அதிகாரபூர்வ அறிவிப்பு.!!
Aiadmk SDPI alliance and seat sharing announced today
தமிழ்நாட்டில் இன்று முதல் வேட்பு மனு தக்கல் தொடங்க உள்ள நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் திமுக தேர்தல் அறிக்கையையும் கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் புரட்சி பாரதம் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்தான அறிவிப்பு இன்று காலை 10 மணியளவில் வெளியாக உள்ளது.
அதேபோன்று புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Aiadmk SDPI alliance and seat sharing announced today