#BREAKING:: அடுத்த ட்விஸ்ட்.. "பாஜக நிர்வாகிகள்" கூண்டோடு ராஜினாமா.. அதிமுகவில் இணைய முடிவு..!!
All chennai west district BJP IT wing executives resigned from party
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் காரணமாக அதிமுக பாஜகவினர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விழித்திருந்தார்.
இதற்கு பதிலடி தந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "அதிமுகவின் அசுர வளர்ச்சியை கண்டு பல கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். விருப்பப்பட்டு பிற கட்சிகளில் இணைவதை அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் இறக்க வேண்டும். அது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இருக்க வேண்டும்" என அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பேரவை பிரிவை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு இன்று ராஜினாமா செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி பிரிவு தலைவர் ஒரத்தி.அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "கட்சியில் சில காலமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வந்த நிலையில் சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்டு ஒரே சமயத்தில் அழைக்க முற்படும்பொழுது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகியது.
ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாஜகவில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள் தான், பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவனல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்கும் தெரியும்.
என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு நான் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது. தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை.
துஷ்ட சக்திகள் இடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரமாகவே இதை செய்கிறேன். நிச்சயம் திமுகவில் இணைய மாட்டேன். திமுகவை விமர்சிக்கவே பாஜகவில் இருந்து விலகுகிறேன். தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவரும் என் உள்ள பூர்வமான நன்றிகள்.
என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களது வலியுறுத்தலின் பேரிலும் அன்புக்குரிய தலைவர் திரு சி.டி.ஆர் நிர்மல்குமார் அவர்களுடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவருடன் சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் துணை தலைவர்கள் சரவணன், ராமாபுரம் ஸ்ரீராம் உட்பட 13 மாவட்ட செயலாளர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த கடிதத்தில் "திமுகவை விமர்சனம் செய்யவே பாஜகவில் இருந்து விலகுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பாஜக ஐடி விங் நிர்வாகிகளுக்கு திமுகவை விமர்சனம் செய்யக்கூடாது என தமிழக பாஜக உத்தரவிட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவர்கள் அனைவரும் கூடிய விரைவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னையில் முன்னிலையில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
All chennai west district BJP IT wing executives resigned from party