இதையும் தாரை வார்த்து விடாதீங்க! தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை!  - Seithipunal
Seithipunal


முல்லைப் பெரியாற்றில் தற்போதுள்ள அணையிலிருந்து 366 மீட்டர் கீழே புதிய அணை கட்டுவதால் இப்போதுள்ள அணை மற்றும் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தது. 

அதை ஆய்வு செய்வதற்காக கேரள அரசால் அமைக்கப் பட்டிருந்த வல்லுனர் குழு தான் இந்த பரிந்துரையை அளித்திருக்கிறது. வல்லுனர் குழுவின் பரிந்துரையை ஏற்று ரூ.1,500 கோடி செலவில் புதிய முல்லைப் பெரியாறு அணையை கட்டுவதற்கு முடிவு செய்துள்ள கேரள அரசு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கேரள அரசின் இந்த நடவடிக்கை ஒருபுறம் அப்பட்டமான உச்சநீதிமன்ற அவமதிப்பு என்றால், மற்றொருபுறம் திட்டமிடப்பட்ட நாடகம் ஆகும். முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான தேவை எள் முனையளவும் ஏற்படவில்லை என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட பொருட்படுத்தாமல் ஒரு மாநில அரசு இப்படி நடந்துகொள்வது இந்தியாவின் இறையாண்மைக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துவிடும். 

எந்தக் காரணம் கொண்டும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதிலிருந்து தமிழகத்திடமிருந்த தண்ணீர் திறக்கும் உரிமையை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கேரளாவிற்கு தாரை வார்த்ததைப் போல இதிலும் நடந்துகொள்ளக்கூடாது.  

எனவே, சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தங்களைக் கொடுத்து கேரளாவின் புதிய அணை கட்டும் முயற்சியை தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தவேண்டும்" என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK TTV Dhinakaran mullai periyaru dam issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->