எங்கு சென்றாலும்.. உங்களது பணி சிறக்கட்டும்.. அண்ணாமலை வாழ்த்து..!!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததோடு பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். குறிப்பாக கடந்த 2019ல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றிவரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது எனவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இதே போல் எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையாக சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரை மறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? என கேள்வி எழுப்பி இருந்தார். மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு மிகப்பெரிய கேடு" என்ன தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து இன்று விலகிய சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் இல்லத்தில் நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகிய சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் "அன்பு சகோதரர் திரு சி.டி.ஆர் நிர்மல் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்" என பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai congratulates NirmalKumar who resigned from BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->