விஜய் சேதுபதி முடிவில் தவறேதும் இல்லை.! அண்ணாமலை அதிரடி.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் நடந்த கூட்டத்தில் பாஜகவின் மாநில துணை தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 450 பேர் அக்கட்சியில் இணைந்தனர்.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் அவர்களின் வரலாற்று படத்தில் நடிப்பதில் எந்த விதமான தவறும் இல்லை. சினிமாவில் அரசியலை கலப்பது சரியல்ல.

மேலும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? என்பது குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமையும், தமிழக தலைமையும் தான் முடிவு செய்ய வேண்டும்.

தலைமை உத்தரவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். மேலும், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று தமிழக கட்சிகள் பாஜகவை பொய் பிரசாரம் செய்கின்றது. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அனைவருக்கும் உரிய மரியாதையை செய்வதில் பாஜக தவறியது இல்லை." என்று அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai speech about vijay sethupadhi movie issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->