இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் - அண்ணாமலை கடும் கண்டனம்!
BJP Annamalai Condemn to DMK Udhay Inbanithi Alanganallur Jallikattu
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவித்துள்ள செய்திக்குறிப்பில், "மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.
முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாஜக மணிலா துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "துணை முதலமைச்சர் ஜல்லிக்கட்டுக்கு சென்றதில் தவறில்லை. அவரின் மகன் இன்பநிதி சென்றதிலும் தவறில்லை. இன்பநிதி தன் நண்பரோடு பின்னால் அமர்ந்து பார்ப்பதாக சொன்னதும் தவறில்லை.
ஆனால், ஒரு அமைச்சர் அமர்ந்திருந்த மாவட்டதின் ஆட்சியரை எழச் செய்ததோடு, பின்னர் மகனின் நண்பரை ஆட்சியர் அமர்ந்திருந்த இடத்தில் அமரச் செய்தது மாபெரும் தவறு. சுயமரியாதை பேசுபவர்களுக்கு மரியாதை அளிக்க தெரியாதது தான் திராவிட மாடல். பொறுப்புள்ள அமைச்சராக நடந்து கொண்டிருக்க வேண்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியின்மை இந்த சம்பவத்தால் தெளிவாகிறது.
English Summary
BJP Annamalai Condemn to DMK Udhay Inbanithi Alanganallur Jallikattu