அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல்.."தலைமை பதவிக்கு தகுதியானவரா..?" - பழனிச்சாமியை சாடிய அண்ணாமலை ஆதரவாளர்..!! - Seithipunal
Seithipunal


அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் நீண்ட நாட்களாக பனிப்போர் இருந்து வருகிறது. முதல் கட்ட தலைவர்கள் தார்மீக அடிப்படையில் தங்களை விமர்சனம் செய்து கொள்ளாமல் இருந்தாலும் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது நிலையில் நேற்று தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் திலீப் கண்ணன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை வைத்ததோடு அக்கட்சியில் இருந்து விலகதுவதாகவும் அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் தமிழக பாஜக இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவு மாநில தலைவரும் அண்ணாமலையின் ஆதரவாளருமான அமர் பிரசாத் ரெட்டி அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "அதிமுக கூட்டணி கட்சியாக இருந்து இதை செய்திருக்க கூடாது. தமிழகத்தில் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆட்சி அமையும். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? 

இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை! நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?

கொங்கு வாக்காளர்கள் இப்பகுதியை தங்கள் கோட்டையாகக் கருதியவர்களை வெளியேற்றியுள்ளனர். 66000 வித்தியாசத்தில் தோற்றது மூச்சு விடுவதற்கான அறிகுறி கூட இல்லை, கோட்டை பிடிப்பதை மறந்து விடுங்கள். தமிழகத்தின் ஒரே எதிர்காலம் பாஜகதான்" என அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு அதிமுக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive criticized AIADMK and Edappadi k Palanisamy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->