டெல்லியில் பரபரப்பு.. பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை..!
BJP executive gun shot dead in Delhi
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறையல அடுத்து தலைநகர் டெல்லியின் கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி மயூர் விஹார் பகுதியில் பாஜக நிர்வாகி ஜிது சவுத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் நீட்தேர்வு துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். மேலும், குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட கொலை தொடர்பான சில ஆதாரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி வீடியோ காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாக டெல்லி கிழக்கு பகுதி காவல் துறை அதிகாரி பிரியங்கா காஷ்யப் தெரிவித்துள்ளார்.
டெல்லி மருத்துவமனையில் ஜிது சவுத்ரி உடலை பார்வையிட்ட டெல்லி பாஜக தலைவர் ஆஜேஷ் குப்தா அவர் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றார். மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
English Summary
BJP executive gun shot dead in Delhi