மகாராஷ்டிராவில் மீண்டும் கால்பதித்த பாஜக!...அப்பட்டமான ஊழல் - தமிழிசை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு  ஒரே கட்டமாக இந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு இன்று வெளியாகி வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மைக்கான இடங்கள் 145. இந்த சூழலில்,   200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம்  
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியை தக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

தொடர்ந்து மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்தியாவில் பலம் பொருந்திய மாநிலம் மகாராஷ்டிரா தான் என்றும், சின்ன இந்தியா என்றே சொல்லலாம் என்று கூறினார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் உள்ள மக்களும் கணிசமான மக்கள்தொகையோடு வாழக்கூடிய மாநிலம் மகாராஷ்டிரா என்றும், அதனால் பரவலாக பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர்,
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றி சரித்திர வெற்றி என்று பெருமிதம் கொண்டார்.

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் மீது அப்பட்டமான ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்றும், அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், ஆனாலும் மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp has set foot again in maharashtra bright corruption tamilisai sensational interview


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->