கோவையில் மக்களை திரட்ட பள்ளி வாகனங்களை அழைத்த தமிழக அரசு, கொந்தளிக்கும் பாஜக அண்ணாமலை!  - Seithipunal
Seithipunal


மூன்று நாள் அரசு பயணமாக கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு க ஸ்டாலின் அங்கு பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொள்கிறார். நேற்று  விமானத்தில் கோவை சென்ற முதலமைச்சர் ஆகஸ்ட் 24 25 26 ஆகிய மூன்று நாட்கள் இந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த சுற்று பயணத்திற்காக மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசு பொறுப்பு ஏற்குமா? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்

அவர் வெளியிட்ட பதிவில், "இன்று கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன். 

திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா?" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Leader annamalai tweet about Coimbatore Govt function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->