போலீஸ் மட்டும் வரல உயிர் போய் இருக்கும்! வன்முறைக் காடாக மாறிவரும் தமிழகம் - பாஜக தரப்பில் கடும் கண்டனம்!
BJP Narayanan Condemn to DMK Govt Law an Order trippur incident
திருப்பூர்: பேக்கிரி கடை ஊழியர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டி, அமைதி பூங்காவன தமிழகம் வன்முறைக் காடாக மாறி வருவதாக, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "திருப்பூரில் ஒரு கடையில் நான்கு குண்டர்கள் மது போதையில் கடையில் இருந்த பணியாட்களை கடுமையாக தாக்கும் காட்சி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் மற்றுமொரு உதாரணமாக இதை நாம் பார்க்க முடிகிறது. முழுக்க முழுக்க மது போதையே இதற்கு காரணம்.
போதை பல படுகொலைகளை அரங்கேற்றுவதோடு, வன்முறையை தூண்டுகிறது என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.
ரோந்து சென்ற காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறப்பு என்றாலும், அந்த கடை பணியாளை மிக கடுமையாக கொலை வெறியோடு தாக்கிய பின்னரே அங்கு காவலர்கள் சென்றுள்ளார்கள்.
சிறிது தாமதித்திருந்தாலும் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும். அமைதி பூங்காவன தமிழகம் வன்முறைக் காடாக மாறிவருவது ஆபத்து" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Condemn to DMK Govt Law an Order trippur incident