இதை விட திமுக அரசுக்கு வெட்கக்கேடு வேறு எதுவும் இல்லை! திமுக அமைச்சர்கள் மீது திமுக எம்எல்ஏ, கடும் குற்றச்சாட்டு! பாஜக நாராயணன் கடும் விமர்சனம்!
BJP Narayanan thirupathy condemn to DMK Govt for DMK MLA Velmurugan pressmeet
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தேர்தலுக்கு முன்னர் திமுக தலைமையிலிருந்து தகவல் வரும். அதே மந்திரியானதும் அமைச்சர் பேசுவதில்லை, அவர்களின் டபேதார், வேலைக்காரர்கள் போன் செய்து அமைச்சர் சொன்னார், அழைத்தார் என்று தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
அமைச்சர்கள் வாய் திறந்தால் கௌரவ பிரச்சினையா? பதவி வந்தவுடன் எங்கிருந்து வருகிறது இந்த அதிகார போதை? இன்னும் ஒரு வருடம் கழித்து எங்கு வர வேண்டும்? இங்கு தானே? தமிழக முதல்வருக்கு இந்த செய்தி போக வேண்டும்" என்று பண்ருட்டி திமுக எம் எல் ஏ வேல்முருகன் கடும் கோபம்.
இதை விட 'திராவிட மாடல்' திமுக அரசுக்கு வெட்கக்கேடு வேறு எதுவும் இல்லை. தைரியமிருந்தால் திமுக சட்டமன்ற உறுப்பினரை நீக்க முடியுமா திமுக தலைவர் மு.க,.ஸ்டாலின் அவர்களே?" என்று நாராயணன் திருப்பதிகேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Narayanan thirupathy condemn to DMK Govt for DMK MLA Velmurugan pressmeet