நிவாரணம் கேட்டால் கைது செய்யும் அராஜக திமுக அரசு! பாமகவை தொடர்ந்து அதிமுக, பாஜக கடும் கண்டனம்!
PMK ADMK BJP Condemn to DMK Govt MK Stalin
அதிமுக நிர்வாகி ராஜ் சத்யன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஏற்கனவே புயலால் அனைத்தும் இழந்து நிற்கும் மக்களுக்கு, நிவாரணம் கொடுக்க கொடுக்க முடியாத, கேட்டால் கைது செய்யும் அராஜக திமுக அரசு!
உணவுக்கும் நீருக்குமே மக்களை கையேந்த விட்ட இந்த முக ஸ்டாலினின் அரசு, இப்போது நிவாரணத்திற்கும் போராட வைத்துள்ளது.
விடியா திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று போராடினால்; அடிப்படை தேவைகளுக்காக போராடினால் கைது என்ற நிலையில்,
இப்போது அரசு சொன்ன நிவாரணத்தை மக்கள் கேட்டால் கூட கைது தானா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு பாஜக இதுகுறித்து ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், "கடலூர் , விழுப்புரம் மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.6000 வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும். அதற்கு மாறாக, அடக்குமுறைகளின் மூலம் பொதுமக்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று திராவிட மாடல் அரசு நினைத்தால் அதற்கு இந்த மாவட்ட மக்கள் கடுமையான பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK ADMK BJP Condemn to DMK Govt MK Stalin