இளையராஜாவை வெளியில் அனுப்பிய விவகாரம் - கோவில் நிதிவகம் சொன்ன அதிர்ச்சி தகவல்.!
srivillipuththur aandal temple explain ilaiyaraja contoversy
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வெளியான "திவ்ய பாசுரம்" நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார்.
இதையடுத்து அவர் ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர்.
வெளியில் வைத்தே இளையராஜாவிற்கு மரியாதை அளித்தனர். அதன்பின் இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு "திவ்ய பாசுரம்" நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.
இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையாக எழுந்தது. இது குறித்து கோவில் நிர்வாகம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது:- "ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதி கிடையாது. அர்த்த மண்டபத்துக்குள் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
srivillipuththur aandal temple explain ilaiyaraja contoversy