வன்மையாக கண்டிக்கிறேன்! நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை இன்று நேரில் சந்தித்த நடிகை கஸ்தூரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "நான் சர்ச்சையில் சிக்கிய போது எனக்கு பக்கபலமாக இருந்தவர் அண்ணாமலை. அவருக்கு நன்றி தெரிப்பதற்காக கமலாலயம் வந்தேன்.

இந்த சந்திப்பில் அரசியல் சம்மந்தமாகவும் பேசினோம். திமுகவை வீழ்த்த தமிழகத்தில் வலிமையான ஒரு கூட்டணி அமைப்பது அவசியம்.

இளையராஜா இசைக்கடவுள், கருவறைக்குள் இசைக்கடவுள் செல்ல வேண்டியதில்லை. கோயிலுக்கு செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை.

இளையராஜா கோவில் கருவறைக்குள் செல்ல முயற்சி செய்யவே இல்லை. யாராக இருந்தாலும் கோயில் கருவறைக்குள் செல்ல முடியாது.

எந்த சாதியாக இருந்தாலும் சரி, பிராமணர்களாக இருந்தாலும் சரி. அர்ச்சகர்கள் மட்டும் தான் கோவில் கருவறைக்குள் செல்ல முடியும்.

கோவில் கருவறைக்குள் அனுமதிக்கவில்லை என்ற சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன்''  என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Kamalalayam BJP Office Annamalai Actress Kasthuri 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->