பிரபல அதிமுக புள்ளியின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு! - Seithipunal
Seithipunal


தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில், அதிமுகவின் முன்னாள் ஊராட்சி தலைவர் பாலமுருகனின் வீட்டில் மர்ம நபர்கள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திங்கட்கிழமை நள்ளிரவில், அடையாளம் தெரியாதவர்கள் அவரது வீட்டின் முன்பக்கம் நோக்கி இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதில் சுவர் மற்றும் கூரைகள் சேதமடைந்தன. வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்பது குறித்த நிம்மதியான தகவல்.

அதிமுகவின் முக்கிய பிரமுகர் மீது நடைபெற்ற இந்த தாக்குதல், ரெங்கநாதபுரம் பகுதியில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வெடிகுண்டுகளை வீசி தப்பிச்சென்ற மர்ம நபர்களைக் கண்டறிந்து பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்படுகின்றன. தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணங்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bombs attack Thanjavur ADMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->