சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!
Chandrababu Naidu bail plea hearing adjourned tomorrow
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவர் மனு சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திர மாநில அரசின் இளைஞர் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட திட்டத்தில் அவருக்கு 118 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் அதிகாலை ஆந்திர மாநில சிறப்பு புலனாய்வு போலீசார் சந்திரபாபு நாயுடுவை கைது செய்து விஜயவாடாவில் இருக்கும் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அவரிடம் தொடர்ந்து 10 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கியது.
நீதிமன்றத்தின் உத்தரவுபடி அவர் ராஜமுந்திரி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திர மாநில முதல் முழுவதும் பதற்றமான சூழல் நிறைவு வரும் நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் விஜயவாடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று இரவு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று விஜயவாடா நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த வழக்கு அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டதாகவும், அரசியல் காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவை கைது செய்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்தார்.
சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்று முடிந்த நிலையில் நாளை மீண்டும் விசாரணை தொடங்கும் என விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் அறிவித்து விசாரணையை நாளை ஒத்தி வைத்துள்ளது.
English Summary
Chandrababu Naidu bail plea hearing adjourned tomorrow