திமுக கொடுத்ததே 16 சீட்டு, அதில் 6 சீட்டை எடுத்துக்கொண்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள்.! - Seithipunal
Seithipunal


நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 16 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 5 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் போட்டியிட இருப்பது, அரசியல் கட்சியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சென்னையில் 7 மாவட்ட தலைவர்கள் பொறுப்பில் உள்ளனர். இதில், 5 மாவட்ட தலைவர்கள் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்பட்ட உள்ளனர். அதன்படி, 

வார்டு எண்.6-ல் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம்,
வார்டு எண்.37-ல் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லி பாபு,
வார்டு எண்.63-ல் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன்,
வார்டு எண்.170-ல் தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ. முத்தழகன்
வார்டு எண்.165-ல் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் களமிறங்கியுள்ளார்.

மேலும், தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் துரையின் வார்டு (173) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அவரின் மகள் டி.சுபாஷினியை வார்டு 126-ல் களமிறக்கியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai congress candidate 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->