திமுகவினருக்கு குட் நியூஸ் வருமா? செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு.!!
Chennai court verdict in senthil balaji case today
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் முக்கிய புள்ளியாக வளம் வந்ததால் அவரின் இந்த வழக்கு திமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் நேற்று அமலாக்கத்துறை பதில் தாக்கல் செய்து நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
English Summary
Chennai court verdict in senthil balaji case today