இந்தியா கூட்டணி தொண்டர்கள் இடையே மோதல்.!! பிரச்சாரக் கூட்டத்தில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி தொடங்கிய ஜூன் ஒன்றாம் தேதி வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றன. 

அம்மாநிலத்தில் உள்ள சத்துர மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.என் திரிபாதி நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே ஜார்க்கண்ட் மாநில தலைநகர் காஞ்சியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது. 

இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்டனர். இதனால் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. இந்த மோதலில் செயல் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clash between Congress RJD cadres


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->