நிர்வாண வீடியோ .. பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்த வாலிபர் கைது!
Nude video Man arrested for sexually assaulting women
இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பேசி பழகி பல பெண்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி நிர்வாண வீடியோ காலில் வரச்சொல்லி அதை ரெக்கார்ட் செய்து சமூக வலைதளங்களில் அனுப்பி விடுவதாக மிரட்டி உல்லாசமாக இருப்பதற்காக அவர் கூறும் இடத்திற்கு பெண்களை வர வைத்த மன்னார்குடியை சேர்ந்த முஜீப் அலி என்ற 30 வயது நபரை புதுச்சேரி இணையவழி போலீசாரால் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கின்றார். குறிப்பாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் என்ற செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். அறிமுகம் இல்லாத ஒரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து இவருக்கு பிரண்ட் ரிக்வெஸ்ட் வந்துள்ளது. பின்னர் இவர் அந்த நபருடன் நட்பாக பேசி பழகி உள்ளார். சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த நபர் தன்னை காதலிப்பதாக கூறியுள்ளார். இந்தப் சிறுமி அந்த காதலை ஏற்க மறுத்துள்ளார். கோபமடைந்த அந்த நபர் உனது போட்டோவை மாஃபிங் செய்து சமூக வலைத்தளங்களில் அனுப்பி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். மேலும் அவரை ஆடையில்லாமல் நிர்வாணமாக வீடியோ கால் செய்யுமாறு மிரட்டி உள்ளார். பயந்து போன அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இது சம்பந்தமாக பெற்றோர்கள் புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் திரு. தியாகராஜன் அவர்கள் குற்ற எண்: 01/2025 U/s 79, 351 (3) of BNS, 14 of POCSO Act, 2012 and 67(B) of the Information Technology Act 2000 வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அந்த நபர் தான் கடலூர் வந்துவிட்டதாக கூறி நீ கடலூர் வரவில்லை என்றால் உன்னுடைய போட்டோக்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று சிறுமியை மார்பிங் செய்த புகைப்படம் ஒன்றை அந்த பெண்ணிற்கு அனுப்பி மிரட்டி உள்ளார். இந்தத் தகவலை அந்த சிறுமியின் பெற்றோர் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளரிடம் கூறினார். உடனே ஆய்வாளர்கள் திரு. தியாகராஜன் மற்றும் திரு.கீர்த்தி தலைமை காவலர் இருசவேல், காவலர் அரவிந்தன், பெண் காவலர் கமலி ஆகியோர்கள் கடலூர் சென்று அந்த பெண்ணை எந்த இடத்திற்கு வரச் சொன்னார்களோ அந்த இடத்திற்கு இணைய வழி காவல் துறையினர் சென்று அந்த பெண்ணிடம் சில அடையாளங்களை கூறிய அந்த நபர் மேற்கண்ட இடத்திற்கு வந்த பொழுது புதுச்சேரி இணைய வழி போலீசார் மேற்படி நபரை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் இருந்த தொலைபேசியை பார்த்த பொழுது அந்த சிறுமியின் மார்பிங் புகைப்படம் இருந்துள்ளது.
ஆகையால் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததை அடுத்து மேற்படி நபரை கைது செய்து இன்று மாலை தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி மொபைலை ஆய்வு செய்தபோது அவர் பல்வேறு பெண்களுக்கு இது போன்ற 2020 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு பெண்களை ஆடை இல்லாமல் வீடியோ கால் வரச்சொல்லி அதனை ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டு மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அவர் 10க்கும் மேற்பட்ட போலியான இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் ஐடி பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. அவருடைய செல்போனில் 15 க்கும் மேற்பட்ட பெண்களுடைய புகைப்படங்கள் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் அவருடைய செல்போனை இணையவழிப் போலீஸ் ஆகிய நாங்கள் ஆய்வு செய்து வருகின்றோம்.
இது பற்றி இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. நாரா சைத்தானியா IPS அவர்கள் பொதுமக்களுக்கும் இளம்பெண்களுக்கும் எச்சரிக்கை மற்றும் அறிவுரை சொல்வது என்னவென்றால் சமூக வலைதளங்களில் முகம் தெரியாத புதிய நபர்கள் அனுப்பும் ஃப்ரண்ட் ரிக்வெஸ்ட்டை ஏற்க வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களில் பார்ப்பது அனைத்தும் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார் மற்றும் நிர்வாணமாக போட்டோ எடுப்பதும் வீடியோ கால் செய்வதும் பிரச்சனையை ஏற்படுத்தும் ஆகையால் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றார். சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக வேண்டாம். உங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏதேனும் மிரட்டல் வந்தால் உடனடியாக உங்கள் பெற்றோரிடமோ அல்லது காவல்துறைக்கோ அல்லது உங்கள் நம்பிக்கை கூறியவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தவும். 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் அறிவுறுத்துகின்றனர்.
English Summary
Nude video Man arrested for sexually assaulting women