தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பட்டுள்ள நிலையில், சற்றுமுன் தமிழக முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
cm stalin school reopen some rule
கோடை விடுமுறைக்கு பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது
அனைத்து பள்ளிகளும் காலை வணக்கம் கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை அதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கல்வி பயில்வோருக்கு தரமான உணவு தயாரித்து உரிய நேரத்தில் வழங்க சத்துணவு மைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் ஸ்டாலின், பள்ளி வளாகங்களில் உள்ள கழிவறைத் தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
cm stalin school reopen some rule