"இண்டியா" கூட்டணி மிக முக்கியம்.! நிதிஷ்குமார் அதிருப்தி; காங்கிரஸ் மறுப்பு.!!
Congress denial Nitish kumar allegation
கடந்த நவம்பர் 2ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடத்தப்பட்ட பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் 5 மாநில சட்டமன்ற பொது தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு காங்கிரஸ் தன்னிச்சையான முறையில் செயல்பட தொடங்கி விட்டது.
மாநில தேர்தலில் மட்டும் காங்கிரஸ் ஆர்வம் செலுத்தி வருவதால் சமீப காலமாக இண்டியா கூட்டணியில் செயல்பாடு வேகமே பெறாமல் தொய்வடைந்துள்ளது. ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது" என நிதிஷ் குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்து இருந்தார்.
இதனால் பதறிப்போன காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியின் மூலம் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு "காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா கூட்டணி மிகவும் முக்கியம். காங்கிரஸ் தற்போது தெலுங்கான, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் கணவன் தேர்வு செலுத்தி வருகிறது மாநிலத் தேர்தல் முடிந்ததும் இண்டியா கூட்டணி கொள்கைகள் மற்றும் கூட்டுப் பேரணிகளில் காங்கிரஸ் கவனம் செலுத்தும்" என நிதிஷ் குமாரை சமாதானம் செய்துள்ளார்.
English Summary
Congress denial Nitish kumar allegation