5 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி.. கவலையே இல்லாமல் கார்த்தி சிதம்பரம் ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் ஒரு கருத்து விமர்சனங்களை பெற்று வருகிறது. 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. 
,
இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மீதமுள்ள மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கோவா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாபில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. 

மேலும், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் படு மோசமான தோல்வியை எட்டியுள்ளது. கோவா மற்றும் உத்தரகண்டில் குறைவான இடங்களை தான் பெற்றுள்ளது. 

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட அனைத்து மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கட்சியினரும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், தமிழக நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அது பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு நெட்பிலிக்சில் எந்த படம் பார்க்கலாம் என்று கூறுங்க." என பதிவிட்டுள்ளது. பலரிடமும் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress mp kartchi chidhambaram tweet viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->