#பரபரப்பு || பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தும் வகையில், கருப்பு பலூன் விட்ட காங்கிரஸ் கட்சியினர்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் ஆந்திரப் பயணத்தின் போது ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கருப்பு பலூன்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட்டவுடன், கருப்பு பலூன்களை வீசியதற்காக 3 காங்கிரஸ் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர், 

மேலும், விமான நிலையத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது என்று, கிருஷ்ணா மாவட்ட எஸ்பி சித்தார்த் கவுஷல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"இந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் 4 காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர். 

கைது செய்யப்பட்ட 4 காங்கிரஸ் தொண்டர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.பிரதமர் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு (விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் வழியாக) பலூன்கள் வெளியிடப்பட்டன" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும்,  கன்னவரம் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தபோது பாதுகாப்புக் குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress worker black balloons after PM Modis chopper took off Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->