துப்பாக்கி முனையில் மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கும் பாஜக.?! கெஜ்ரிவால் சரமாரி தாக்குதல்.!
Delhi cm arvind kejriwal blasts bjp in assembly meeting for misusing govt agencies
டெல்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்தவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாரதிய ஜனதா கட்சி, அரசு இயந்திரங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக டெல்லி சட்டசபை கூட்டத்தில் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், அரசு இயந்திரங்களான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ யாரிடம் சோதனை செய்கிறார்களோ, அவர்களின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து ஜெயிலுக்கு செல்கிறீர்களா? இல்லை பாஜகவில் சேருகிறீர்களா? என்று மிரட்டுமளவிற்கு அரசு இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊழல் பற்றி பேசிய கெஜ்ரிவால், "மோடி எப்போது பதவியில் இல்லையோ அப்போதுதான் இந்தியா ஊழலற்ற நாடாக மாறும்" என விமர்சித்திருக்கிறார். இவர்களது ஆட்சியின் ஊழலை பற்றி உள்நாடு முதல் வெளிநாடு வரை சிரிக்கிறது என சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார்.
இந்தியா ஊழலற்ற நாடாக இருக்க வேண்டுமானால் பாரதிய ஜனதா அரசு பதவி விலகி இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்பு தான் இந்தியா ஊழலற்ற நாடாகயிருக்கும் என விமர்சித்திருக்கிறார் டெல்லியின் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால்.
English Summary
Delhi cm arvind kejriwal blasts bjp in assembly meeting for misusing govt agencies