கவர்ச்சியான வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!
Delhi Congress manifesto
70 தொகுதிகளுக்கான தலைநகர் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது, முடிவுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகும்.
ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாகப் பிரசாரம் செய்து வரும் நிலையில், பாஜக, 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் உள்ளது.
தலைநகர் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், மாதந்தோறும் ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை, ரூ. 25 லட்சம் வரையிலான இலவச சுகாதாரக் காப்பீடு திட்டம் மற்றும் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதாந்திரம் ரூ. 8,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் முன்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், புதிய தேர்தல் வாக்குறுதிகளை டெல்லி காங்கிரஸ் இன்று வெளியிட்டது. இதன்படி,
சிலிண்டர் ரூ. 500-க்கும் வழங்கப்படும்,
ரேசன் தொகுப்புகள் இலவசமாக கிடைக்கும்.
கூடுதலாக, 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.