நாங்கள் தான் பர்ஸ்ட் | திருப்புமுனையாக அமையும் இடைத்தேர்தல் - தேமுதிக எல்.கே.சுதீஷ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், தேமுதிகவிற்கு திருப்புமுனையாக அமையும் என்று, அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக தீவிர பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கியுள்ள நிலையில், அதிமுக தரப்பில் கே எஸ் தென்னரசு களமிறங்கி உள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவையும் கூட்டணி இல்லாமல் தனித்து களமிறங்கியுள்ளன.

மேலும், சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என்று மொத்தமாக 77 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஈரோடு இடைத்தேர்தல் குறித்து கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கும்பகோணத்தில் தேமுதிக நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தாவது, "இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியலில் எங்கள் கட்சியின் வேட்பாளர் பெயர் முதலில் உள்ளது. 

அதன்படி, வாக்கு எந்திரத்திலும் எங்கள் கட்சியின் சின்னம்தான் முதலில் உள்ளது. இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. அந்த வகையில், இந்த இடைத் தேர்தல் தேமுதிகவுக்கு திருப்புமுனையாக அமையும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK LK Sudeesh Say About BY Election 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->