பாஷா-வால் சிக்கலில் திமுக அரசு! ஊழல்வாதிகளுக்கு பக்கபலமாக இருக்கும் திமுக அரசு - கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


ஊட்டியில் லஞ்ச ஒழிப்பு போலீசில் ரூ.11 லட்சத்துடன் சிக்கிய நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, தற்போது திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் ஆணையாளராக இருந்த ஜஹாங்கீர் பாஷா, கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஊட்டி நகராட்சிக்கு மாற்றப்பட்டார். அங்கு அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு ஒப்புதல் அளித்தது மற்றும் சட்டவிரோத அனுமதிகளுக்கு பணம் வாங்கியதாக அவருக்கு மீதே குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நவம்பர் 9 அன்று, பணியை முடித்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த ஜஹாங்கீர் பாஷா, ஊட்டி-கோத்தகிரி சாலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் மடக்கி சோதனை செய்யபட்டார். அவரின் காரில் கணக்கில் வராத ரூ.11.7 லட்சம் மீட்கப்பட்டது. 

இது லஞ்சப் பணம் என உறுதிபடுத்தப்பட்டதால், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டார். 

ஆனால், சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், அவரை திருநெல்வேலியில் பதவி உயர்வுடன் நியமித்தது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

அறப்போர் இயக்கம் விமர்சனம் : 2 வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி. ஊட்டியில் லஞ்சம் வாங்கி சிக்கிய Municipal Commissioner  திருநெல்வேலியில் Asst Commissioner பதவியில் நியமிக்கப்பட்டார். அதானி முதல் ஜஹாங்கீர் பாஷா வரை ஊழல்வாதிகளுக்கு பக்கபலமாக இருக்கும் திமுக அரசு. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Basha scam case dmk govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->