மகாராஷ்டிரா முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்.. விலகிய ஏக்நாத் ஷிண்டே! - Seithipunal
Seithipunal


288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 20 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. 

பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளும் மாகயுதியில் பாஜக 132, ஷிண்டே சேனா 57, அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5 இடங்களை வென்று 235 தொகுதிகளைப் பெற்றது. 

நேற்றுடன் மகாராஷ்டிர சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

அடுத்த அரசு அமைவதற்கு வரை அவர் பொறுப்பில் இருப்பார் என கூறப்பட்டது. இதற்கிடையே, முதல்வர் பதவிக்கான போட்டியில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இடையே கடும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, "இதுவரை தன்னால் மக்களுக்காக செய்த பணிகளில் திருப்தியுள்ளதாக தெரிவித்த ஷிண்டே, முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

மேலும், பிரதமர் மோடியின் முடிவு முக்கியம் எனக் கூறிய அவர், எந்த முடிவையும் முழுமையாக ஏற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிரா முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra cm devendra fadnavis Eknath Shinde


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->