ரூ. 3,383 கோடி சொத்துடன் முதல் இடம் பிடித்த பாஜக எம்எல்ஏ!
Maharastra Election 2024 bjp mla
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் முடுவுகளின்படி, பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி ஆட்சியில் நீடித்துள்ளது.
பாஜக 132 இடங்கள், சிவசேனை 57, தேசியவாத காங்கிரஸ் 41, இதர கூட்டணி காட்சிகள் 5 இடங்களில் வெற்றிபெற்றன.
மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனை (உத்தவ்) கட்சி 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி 10, இதர கூட்டணி காட்சிகள் 4 இடங்கள் என 50 இடங்களையே பெற்றன.
இந்நிலையில், இந்த தேர்தலில் முதல் 10 பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) வெளியிட்டுள்ள விவரங்கள் படி, 2024 தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 43.42 கோடியாக உள்ளது.
முதல் இடத்தில் கிழக்கு கத்கோபூர் தொகுதி பாஜக எம்எல்ஏ பராக் ஷா ரூ. 3,383 கோடி சொத்துடன் உள்ளார்.
பன்வேல் தொகுதியின் பிரசாந்த் தாகூர் ரூ. 475 கோடியில் இரண்டாம் இடத்திலும்,
மலபார் ஹிலின் மங்கள் பிரபாத் லோஹத் ரூ. 447 கோடியில் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
சிவசேனை எம்எல்ஏ பிரதாப் சர்நாயக் ரூ. 333 கோடியில் நான்காம் இடத்திலும்,
சமாஜவாதி கட்சியின் அபு அசிம் அஸ்மி ரூ. 309 கோடியில் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.
ஆறாவது இடத்தில் ரூ. 299 கோடியுடன் பலுஸ்-கடேகவன் எம்.எல்.ஏ. கதம் விஸ்வஜித் பதங் ராவ் (காங்கிரஸ்),
ஏழாவது இடத்தில் ரூ. 262 கோடியுடன் ஹிங்னா எம்.எல்.ஏ. சமீர் தத்தாத்ரயா மேகே (பாஜக),
எட்டாவது இடத்தில் ரூ. 235 கோடியுடன் பரந்தா எம்.எல்.ஏ. டாக்டர். தனஜி ஜெயவந்த் சாவந்த் (சிவசேனை),
ஒன்பதாவது இடத்தில் ரூ. 212 கோடியுடன் நய்கவன் எம்.எல்.ஏ. ராஜேஷ் சம்பாஜி ராவ் பவார் (பாஜக),
பத்தாவது இடத்தில் ரூ. 208 கோடியுடன் வத்கவன் ஷேரி எம்.எல்.ஏ. பாபு சாஹிப் துகாராம் (தேசியவாத காங்கிரஸ்-சரத்பவார்) உள்ளார்.
English Summary
Maharastra Election 2024 bjp mla