கடலூரை குறிவைத்த தேமுதிக! வெளியான முக்கிய அறிவிப்பு!
DMDK premalatha vijayakanth
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம்பட்டி கே.வி.மஹாலில் இன்று தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது..
பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவைத் தலைவராக டாக்டர் இளங்கோவன், பொருளாளராக எல்.கே. சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, கொள்கை பரப்புச் செயலாளராக ஆர். மோகன்ராஜ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.
துணைச் செயலாளர்களாக எம்.ஆர். பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இளைஞரணிச் செயலாளராக விஜய பிரபாகரன் பொறுப்பேற்றார்.
கூட்டத்தில், வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் மாநில மாநாடு நடைபெறும் என பிரேமலதா அறிவித்தார்.
பின்னர், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விஜயகாந்துக்கு பாரத ரத்னா வழங்கி, மணி மண்டபம் அமைக்க வேண்டும், 100 அடி சாலைக்கு அவரது பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பஹல்காம் பயணிகள் தாக்குதல், மதுபானம், கஞ்சா, கள்ளச்சாராயம் ஒழிப்பு, வக்பு சட்ட பாதுகாப்பு, கச்சத்தீவு மீட்பு, பட்டாசு ஆலைய பாதுகாப்பு, நெசவாளர்களுக்கான தீர்வுகள் போன்ற விவகாரங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
English Summary
DMDK premalatha vijayakanth