அதிரடி நடவடிக்கை!!! திமுகவினர் பொது இடத்தில் இருக்கும் கொடி கம்பங்களை அறவே அகற்ற வேண்டும்...! - துரைமுருகன் உத்தரவு
DMK members must remove flagpoles in public places Duraimurugan orders
தி.மு.க.கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,"தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்துக் கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு,2 நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.
எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தமது பகுதிகளிலுள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்குச் சொந்தமான இடங்களிலும் பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்கனை மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களைத் தலைமைக் கழகத்திற்குத் தெரியபடுத்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை ஏற்று தி.மு.க.கட்சியினர் பலர் கொடிக் கம்பங்களை விரைவாக அகற்றி வருகின்றனர்.
English Summary
DMK members must remove flagpoles in public places Duraimurugan orders