வெளியான செய்தியால் வேதனையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவரின் அந்த இரங்கல் செய்தியில், "தமிழ்நாட்டின் வளர்ந்து வந்த  டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன், ஷில்லாங் சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். 

அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள மேகாலயா சென்ற தமிழக வீரர் விஷ்வா விபத்தில் மரணமடைந்தது தமிழகத்திற்கு பேரிழப்பு. 

ஒரு நட்சத்திர வீரராக வளர்ந்துவரும் சமயத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Mourning To TN Table Tennis player Vishwa Deenadayalan dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->