நெய், வெண்ணெய் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
Dr Anbumani Ramadoss Say About Aavin Butter
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம், ஒன்பது மாதத்தில் நெய் விலையை மூன்று முறை உயர்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ௹ 20 உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்க்கு தமிழக அரசியல் கட்சைகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
![](https://img.seithipunal.com/media/aavin 12.png)
இந்நிலையில், நெய் விலையைத் தொடர்ந்து வெண்ணெய் விலையையும் உயர்த்தி மக்களை பாதிப்புக்குள்ளாக்குவதா? உடனடியாக விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் ஆவின் வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராமுக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருக்கிறது.
நெய் விலை நேற்று லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், வெண்ணெய் விலையையும் ஆவின் உயர்த்தியிருப்பது மக்களை கடுமையாக பாதிக்கும்!
![](https://img.seithipunal.com/media/amr 2.jpg)
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் ஆவின் பால் பொருட்களின் விலை பலமுறை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை ஆவின் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About Aavin Butter