மாலத்தீவில் கொத்தடிமைகளாக சிக்கிய 13 தமிழர்கள் - மத்திய, மாநில அரசுக்களுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
Dr Anbumani Ramadoss Say About Malatheevu Tamil people issue
மாலத்தீவில் ஊதியம் வழங்காமல், முடக்கி வைக்கப்பட்டுள்ள 13 தமிழர்கள் உள்ளிட்ட 48 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மாலத்தீவில் தனியார் நிறுவனமொன்றில் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களுக்கு, அவர்கள் 6 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்த நாளில் நாளில் இருந்தே ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
48 இந்தியர்களுக்கும் தரமான உணவும், தங்குமிட வசதியும் கூட செய்து தரப்படவில்லை. கொத்தடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊதியமும், உரிமையும் கோரி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு, எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பணியை விட்டு தாயகம் திரும்பவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டவிரோதமாக பறித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திடம் புகார் செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.
மாலத்தீவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் நிலை என்னவாகுமோ? என தமிழகத்திலுள்ள அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About Malatheevu Tamil people issue