அவதூறு வழக்கு: இன்று நேரில் ஆஜரான எடப்பாடி!...உயர் நீதிமன்றம் சொன்னது என்ன தெரியுமா?
Defamation case edappadi appeared in person today do you know what the supreme court said
எடப்பாடி பழனிச்சாமியின் அவதூறு வழக்கு விசாரணையை, அடுத்த மாதம் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2022-ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று சாட்சியம் அளிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் டெண்டர் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி சாட்சியம் அளிப்பதற்காக நேரில் ஆஜரான நிலையில், இது தொடர்பான வழக்கினை அடுத்த மாதம் 11-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
English Summary
Defamation case edappadi appeared in person today do you know what the supreme court said