இலங்கையில் தமிழக மீனவர்களை அசிங்கப்படுத்திய சிங்களப்படை., வெளியான காணொளி - கொந்தளிப்பில் Dr. அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


இலங்கை சிங்கள படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீது, கொரோனா கிருமிநாசினியை தெளிப்பான்கள் மூலம் பீய்ச்சியடிக்கும் காணொளி வெளியாகி, உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் தமிழக மீனவர்களின் இந்த அவல நிலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் மீது  இலங்கையில் கொரோனா தடுப்பு என்ற பெயரில் கிருமிநாசினியை சிங்கள சுகாதாரத்துறையினர் தெளிப்பான்கள் மூலம் பீய்ச்சியடித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இத்தகைய மனித உரிமை மீறல் கண்டிக்கத்தக்கது!

மனிதர்கள் மீது கிருமி நாசினியை தெளிப்பது மிகக்கொடுமையான பக்கவிளைவுகளையும், நோய்களையும்  ஏற்படுத்தும். அது அவர்களின் உரிமைகளை மீறிய, அவமதிக்கும் வகையிலான செயல் என்று உலக சுகாதாரம் நிறுவனம் கூறியுள்ளது. அதை மீறிய இலங்கை மீது நடவடிக்கை தேவை!

இலங்கை சிறைவில் அடைக்கப்பட்டுள்ள மைக்கேல் என்ற 53 வயது மீனவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இனியும் தாமதிக்காமல் இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களை  மீட்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Sri Lankan Police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->