பாஜகவுக்கு கல்தா... அதிமுக கூட்டணியில் டாக்டர்.? ஈபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு.!!
Drkrishanasamy met EPS for AIADMK alliance
நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்முறமாக ஈடுபட்டுள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக தரப்பு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விரைவில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தெருந்த டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுடன் இணைய முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதனை உறுதி செய்யும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று இரவு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையில் திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும், அதில் தென்காசி தொகுதியை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Drkrishanasamy met EPS for AIADMK alliance