மாமூல் வசூல், ரவுடியிசமும் செய்து வந்தால் மக்களே தக்க தண்டனை கொடுப்பார்கள் - எடப்பாடி கே பழனிச்சாமி.!
edappadi k palanisami say about counselor
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"தமிழகம் முழுவதும் திமுக கவுன்சிலர்கள் தொடர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் பணி செய்யாமல் மாறாக மாமூல் வசூலிக்கும் பணியும், தொடர்ந்து ரவுடியிசமும் செய்து வந்தால் மக்களே அதற்கு தக்க தண்டனையும் கொடுப்பார்கள்.
மக்களை அச்சுறுத்தி வரும் இத்தகைய நபர்கள் மீது கண்துடைப்பு கைது நாடகமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா இந்த திமுக அரசு?
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
edappadi k palanisami say about counselor