கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? திமுகவின் கனவு பலிக்காது - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, "இறுமாப்புடன் சொல்கிறேன் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற திமுகவின் கனவு பலிக்காது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் எழுச்சி நிரூபணமாகும், அதிமுக 200 இடங்களில் வெற்றி பெறும். 

திமுக கூட்டணி மக்களின் பிரச்சினைகளைக் கவனிக்கவில்லை, அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே கொள்கையை உடையவை என்றால், திமுகவில் இணைந்து விடுவது தான் சரியாக இருக்கும்.  

உதயநிதியை துணை முதல்வராக பதவியேற்றது தான் திமுகவின் பெருமை. கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கின்றனர். திமுக கட்சியல்ல, அது ஒரு கார்ப்ரேட் கம்பெனி!

எங்களுக்கு எவ்வளவு தூரம் ஸ்டாலின் நெருக்கடி கொடுக்கிறாரோ, அவ்வளவு தூரம் அதிமுக வளர்ச்சி அடையும். 

யானைக்கு பலம் தும்பிக்கையில், நமக்கு பலம் நம்பிக்கையில் உள்ளது. நம்பிக்கை இருந்தால் எதிலும் வெற்றி பெற முடியும். கடந்த தேர்தலில் கூட்டணியில் சில பிரச்சினைகள் இருந்ததாக ஏற்றுக்கொண்டு, கூட்டணி என்பது மாற்றமடையும், ஆனால் அதிமுகவின் கொள்கை நிலைத்துள்ளது"

அதிமுக என்பது மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கமாகும். ஒற்றுமையே அதிமுகவின் மிகப்பெரிய பலமாகும்" என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami AIADMK Meeting DMK MK Stalin Udhay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->