ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய தமிழர்கள்? வைரலாகும் வீடியோ!
EVKS Elangovan Death Some People Celebrate video viral
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் நுரையீரல் பாதிப்பால் இன்று காலமானார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ-வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல், முதல்வர் ஸ்டாலின் என பல்வேறு தலைவர்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பெரியாரின் பேரனும், சம்பத்தின் மகனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், 2001 ஆம் ஆண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றபோது, திமுக, அதிமுக தலைவர்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறி பிரபலமடைந்தார்.
மேலும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டபோது, மகிழ்ச்சியடைந்ததாகவும், கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்து, தமிழக மக்களை பெரும் கொந்தளிப்பை ஆழ்த்தி இருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடும் காணொளி வைரலாகி வருகிறது. அதில், செத்து ஒழிந்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன், கொண்டாடுவோம் என்று கடுமையாக விமர்சித்து அந்த நபர்கள் கோஷமிடுவதும் பதிவாகியுள்ளது.
English Summary
EVKS Elangovan Death Some People Celebrate video viral